இளையராஜாவாக நடிக்கும் சத்தியராஜ் .
இரண்டு இசையமைப்பாளர்களை சுற்றி நடக்கும் கதையாக இசை என்ற படத்தை இயக்குகிறார் எஸ்.ஜே.சூர்யா.
இப்படத்தை தானே இயக்கி, இசையமைத்து, நடிக்கவும் செய்கிறார்.
இரண்டு இசையமைப்பாளர்களிடையே ஏற்படும் ஈகோ மோதலை பற்றி எடுத்துக் கூறும் படமாகவும் இப்படம் தயாராகிறது.
இது இளையராஜா மற்றும் ஏ.ஆர்.ரகுமான் பற்றிய கதை என சினிமா வட்டாரத்தில் சலசலப்பு ஏற்பட்டிருக்கிறது.
படத்தில் இரண்டு இசையமைப்பாளர்களின் கதாபாத்திரம் பெயரும் இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான் என உச்சரிப்பது போலவே வருவதாகவும் கூறப்படுகிறது.
ரகுமான் வேடத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிக்கிறாராம். இளையராஜா கேரக்டருக்கு முதலில் பிரகாஷ் ராஜ் ஒப்பந்தமாகி இருந்தாராம்.
கதை கேட்டு நடிக்க சம்மதித்த பிரகாஷ் ராஜ், தான் இளையராஜா கேரக்டரில்
நடிப்பதாக வெளியே தகவல் கசிந்ததும் திடீரென படத்திலிருந்து விலகிவிட்டார்.
சர்ச்சைக்கு பயந்தே அவர் விலகியதாக தற்போது கூறப்படுகிறது. இதையடுத்து பலரிடம் கதையை கூறியுள்ளார் சூர்யா.
ஆனால் யாரும் நடிக்க முன்வராத இந்நிலையில் இப்படத்தில் இளையராஜா
கதாபாத்திரத்தில் நடிக்க சத்யராஜ் ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல்கள்
வெளியாகியுள்ளது.
No comments:
Post a Comment