தலைவாவுக்காக 'டாப் தலை'களைச் சந்திக்க விஜய் தரப்பு தொடர் முயற்சி!

அடுத்து ஜெயலலிதாவுக்கு நெருக்கமான ஆலோசகர் என்று கூறப்படும் மூத்த
பத்திரிகையாளரைச் சந்தித்து உதவி கேட்டதாகக் கூறப்படுகிறது.
ஆனால் அவரோ, தன்னால் இந்த விஷயத்தில் எதுவும் செய்ய முடியாது என்றும்,
தலைவா என தலைப்பு வைக்கும்போதே இதை யோசித்திருக்க வேண்டும் என்றும் பதில்
கூறி அனுப்பிவிட்டதாகத் தெரிகிறது.
தமிழக அமைச்சரவையில் உள்ள ஒரு மூத்த அமைச்சர் மூலம் முதல்வரிடம் பேச படத்தை
வெளியிடும் தரப்பில் முயற்சித்ததாகவும், அதற்கு, இவ்வளவு பெரிய படம்
எடுத்துவிட்டு எதற்காக வரிச் சலுகை கேட்கிறீர்கள் என முதல் சந்திப்பிலேயே
அவர் முற்றுப் புள்ளி வைத்துவிட்டதாகவும் சொல்கிறார்கள்.
தலைவா விஷயம் குறித்து யாரிடமும் பேச விரும்பவில்லை முதல்வர் என்ற
நிலையில், இப்போது இன்னொரு முக்கிய தலைவர் மூலம் முதல்வரை அணுக முயற்சித்து
வருகிறார்களாம் படத்தின் வெளியீட்டாளர்கள்.
---Movie updates
---Movie updates
No comments:
Post a Comment