சிவகார்த்திகேயன் ஜோடியாக ஹன்சிகா!
'சிங்கம் 2', 'தீயா வேலை செய்யணும் குமாரு' ஆகிய படங்கள் ரீலிஸிற்குத் தயாராக இருக்கின்றன. அப்படங்களைத் தொடர்ந்து கார்த்தியுடன் 'பிரியாணி' படத்தில் நடித்து வருகிறார் ஹன்சிகா.
'பிரியாணி' படத்தினைத் தொடர்ந்து அடுத்து நடிக்கும் படத்திற்கு பல்வேறு கதைகளைக் கேட்டு வந்தார் ஹன்சிகா. அடுத்து நடிக்க இருக்கும் படத்தினை முடிவு செய்து இருக்கிறார்.
சிவகார்த்திகேயனுக்கு நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் ஹன்சிகா. இப்படத்திற்கு கதை, திரைக்கதை எழுதி இருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ். அவரிடம் நீண்ட நாட்களாக உதவி இயக்குனராக இருந்து வரும் திருக்குமரன் இப்படத்தினை இயக்க இருக்கிறார்.
நீண்ட நாட்களாக தன்னுடன் பணியாற்றி வருபவரை இயக்குனராக்கி இருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ். 'எதிர் நீச்சல்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தொடர்ச்சியாக வாய்ப்புகள் வந்த போதும் ஏ.ஆர்.முருகதாஸ் கதை, திரைக்கதை என்றவுடன் உடனே ஒப்பந்தமாகி இருக்கிறார் சிவகார்த்திகேயன்.
இப்படத்தினை ஏ.ஆர்.முருகாதஸ் தனது தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரிக்க, அனிருத் இசையமைக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.
சிவகார்த்திகேயன் - ஹன்சிகா - ஏ.ஆர்.முருகதாஸ் இந்த கூட்டணிக்கு இப்போதே எதிர்பார்ப்பு எகிறி இருக்கிறது.

No comments:
Post a Comment