தப்பாட்டம் ஆடும் வடிவேலு!
இரண்டு வருடங்களுக்குப் பிறகு வடிவேலு தமிழ் சினிமாவில் ரீ- என்ட்ரி
ஆகிறார் என்றதும் திரை உலகமே மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தது. ஆனால்,
இந்த மகிழ்ச்சி அவ்வளவு தூரம் நீடிக்காது போலிருக்கிறது.
அந்த அளவுக்கு அலப்பறை கொடுப்பது வேறு யாருமல்ல.வடிவேலுவேதான்.
யுவராஜ் இயக்கும் 'கஜபுஜராஜ தெனாலிராமனும், கிருஷ்ணதேவராயரும்' படத்தில் நடிக்கும் வடிவேலு பாடல் ஒன்றையும் பாடியிருக்கிறார்.
ஷூட்டிங் ஸ்பாட்டில் தான் நடிக்க வேண்டிய காட்சிகளில் நடித்து முடித்துவிட்டாலும் , அந்த இடத்தை விட்டு நகர்வதில்லை. மற்ற ஆர்டிஸ்டுகள் நடிப்பதை வேடிக்கைப் பார்க்கிறார் என்றால் அதுவும் இல்லை.
என்ன நீ இப்படி நடிக்குற? என்று ஏழரையைக் கூட்டுவதோடு, படத்தின் ஸ்கிரிப்டிலும் எக்கச்சக்கமா மூக்கை நுழைக்கிறாராம். 'பட்டாபட்டி' பிறகு இந்த படத்தையே பெரிய அளவில் நம்பிக்கொண்டிருக்கும் இயக்குநர் யுவராஜ் என்ன செய்வதென்று தெரியாமல் முழி பிதுங்கிக் கிடக்கிறார்.
ஒரு நாள் கால்ஷீட்டுக்கான சம்பளத்தில் அஞ்சு பைசா கூடக் குறையாமல் வாங்கிப் பாக்கெட்டில் போட்டுக்கொள்ளும் வடிவேலு மதிய நேர உணவு இடைவேளையின்போது மட்டும் கேரவனில் இரண்டு மணிநேரம் தூங்குகிறாராம். யாராவது அப்போது கேரவனைத் தட்டினால் தொலைந்தார்கள் என்பதால் அந்த இரண்டு மணிநேரம் அந்த கேரவன் ஏரியா மயான அமைதியில் இருக்கிறது.

இதெல்லாம் தெரிந்த பிறகு வடிவேலுவை அவ்வளவு காமெடியனாக ரசிக்க முடியவில்லை!
No comments:
Post a Comment