”விஜய்யும் நானும் கூட்டணியா?” - 'OK OK' ராஜேஷ் பதில்!
நடிகர் விஜய் நடித்த ஆக்ஷன் படங்களின் ஹிட் விஜய்யை ரசிகர்கள் மத்தியில் ஒரு மாஸ் ஹீரோவாகவே நிறுத்தியிருந்தது.
ஆக்ஷன் படங்களிலிருந்து மாறுபட்ட முழுநீள காமெடி படமான நண்பன் படத்தில்
நடித்துவிட்டு, சீரான இடைவெளியில் இனி காமெடி சப்ஜெக்ட் கொண்ட
திரைப்படங்களிலும் நடிப்பேன் என்று விஜய் கூறியிருந்தார். இந்நிலையில்
காமெடி படங்களில் மாபெரும் ஹிட் கொடுத்த இயக்குனர் ராஜேஷ், தற்போது
கார்த்தி நடிக்கும் ஆல் இன் ஆல் அழகுராஜா கதையை விஜய்க்காக உருவாக்கியதாக
பேசப்பட்டுவந்தது.
விஜய்யிடம் கால்ஷீட் இல்லாததால் கார்த்தியை வைத்து ஆல் இன் ஆல் அழகுராஜா
துவங்கப்பட்டுவிட்டதாகவும், விஜய்க்காக வேறு ஒரு கதை உருவாக்கப்பட்டு
விஜய் தற்போது நடித்துக்கொண்டிருக்கும் ஜில்லா முடிந்ததும் அந்த திரைப்படம்
துவங்கப்படும் என்ற செய்தி தமிழ் சினிமாவையே பரபரப்பாக்கியது.
விஜய்-ராஜேஷ் கூட்டணி பற்றி சமூக வலைதளமான டுவிட்டரில்
பதிலளித்திருக்கும் ராஜேஷ் “ என் அடுத்த படத்தில் நான் இதுவரை
ஒப்பந்தமாகவில்லை. ஆல் இன் ஆல் அழகுராஜா படப்பிடிப்பு
நடந்துகொண்டிருக்கிறது. இந்த திரைப்படம் முடிந்த பிறகு தான் என் அடுத்த
படத்தைப் பற்றி முடிவுகள் எடுப்பேன். நானும் விஜய்யும் இணையவிருப்பதாக
வெளிவரும் செய்திகள் வெறும் வதந்திகள் தான்” என்று கூறியுள்ளார்.
No comments:
Post a Comment