6 Jun 2013

சந்தோஷ் சிவனின் ‘இனம்’! 

 சந்தோஷ் சிவன் இயக்கத்தில் கடைசியாக ரிலீஸான உருமி தமிழில் எதிர்பார்த்த ரிசல்ட் தரவில்லை என்றாலும், மலையாளத்தில் சூப்பர் ஹிட்டானது. உருமியின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாக சந்தோஷ் சிவன் இயக்கத்தில் உருவாகவிருக்கும் திரைப்படம் சிலோன். 

தமிழில் ‘இனம்’ என்ற பெயரில் படமாகவிருக்கும் சிலோன் திரைப்படத்தின் முதல் போஸ்டர் வெளியிடப்பட்டு பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கை பெருவிரலில் கைநாட்டு வைத்தது போன்ற இலங்கையின் வரைபடத்தைக் கொண்டு இனம் திரைப்படத்தின் போஸ்டர் உருவாக்கப்பட்டிருக்கிறது. 

இனம் திரைப்படத்தின் டிரெய்லர் நவம்பர் மாதம் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நடிகர் அரவிந்த்சாமி இனம் திரைப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம். மேலும் அரவிந்த்சாமி கதையில் தனது கதாபாத்திரத்தின் முக்கியத்துவத்தைக் கண்டு பிரம்மித்துவிட்டாராம். 

இலங்கையில் நடக்கும் போரில் சந்தர்ப்ப சூழ்நிலையால் சிக்கிக்கொள்ளும் 8 இளவட்டங்கள் எப்படி கஷ்டப்படுகிறார்கள்? போரின் இடையே இருந்து தப்பிக்கிறார்களா? இல்லையா? என்பது தான் இனம் திரைப்படத்தின் கதையாம்.

No comments: