1 Jun 2013

யாழ்ப்பாணம் நூலகம் எரிக்கப்பட்ட நாள் : இன்றோடு 32 ஆண்டுகள் நிறைவு.

      தென் கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய நூலகமாகத் திகழ்ந்த யாழ்ப்பாணம் நூலகம் சிங்களவர்களால் தீக்கிரையாக்கப்பட்டு இன்றோடு 32 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன.
1981 ஆம் ஆண்டு மே மாதம் 31 ஆம் தேதி தான் அந்த துயரச் சம்பவம் அரங்கேறியது. கிட்டத்தட்ட 97 ஆயிரம் அரிய நூல்களைக் கொண்டிருந்த அந்த நூலகம், சிங்கள அரசியல் சூழ்ச்சிக்கும், வன்முறைக்கும் இலக்காகி எரிந்து சாம்பலானது.
அந்த நூலகம் வெறும் புத்தகக் குவியலாக அல்லாமல், தமிழ்ச் சமூகத்தின் பண்பாடு, இலங்கை மண் உடனான அவர்களது உறவு, இலங்கையின் வளர்ச்சிக்கு அவர்கள் அளித்த பங்களிப்பு, அதோடு, இலங்கை அரசியலில் அவர்களுக்கு இருந்த முக்கியத்துவம் என அனைத்துக்கும் ஆதாரமாக இருந்ததாலேயே அந்த பொக்கிஷம் குறிவைக்கப்பட்டது.
நூலகத்தை எரித்ததில், இலங்கையின் அப்போதைய அமைச்சர் காமினி திசாநாயக்கா உட்பட பல முக்கிய தலைவர்களுக்கு பங்கு இருந்தது அம்பலமானது. மீண்டும் பெற முடியாத ஒன்றை இழந்துவிட்டதன் வலியை இன்றளவும் சுமந்து வாழ்ந்து வருகிறார்கள் இலங்கைத் தமிழர்கள்.


No comments: