1 Jun 2013

நானா.. சந்தானமா..! கொதிப்பில் விஷால்!

 'பட்டத்து யானை' படம் தன்னை பெரிய அளவில் நிரூபிக்கும் என்று நம்பிக்கொண்டு இருக்கிறார் விஷால்.

படத்தின் முதல் பாதியில் சமையல்காரன், இரண்டாம் பாதியில் 108 ஆம்புலன்ஸ் டிரைவர் என்று நடிக்கும் விஷால் படத்தில் வரும் பெரிய ட்விஸ்ட் ரசிகர்களுக்கு ஆச்சர்யம் அளிக்கும் என்று சொல்லி வருகிறார்.

'மலைக்கோட்டை' படத்துக்குப் பிறகு பூபதிபாண்டியனுடன் இணைந்திருக்கும் விஷால் படத்தில் சந்தானம் இருப்பதால் சந்தோஷமாக இருந்தார்.

ஆனால், அதுவே இப்போது தலைவலி ஆகியிருக்கிறது. அப்பா, மகன் என்று இரண்டு கேரக்டர்களில் வரும் சந்தானத்தின் போர்ஷன்கள் படத்தில் அதிகம் வருகிறதாம்.

ஹீரோவைக் காட்டிலும் காமெடி நடிகருக்கு இயக்குநர் முக்கியத்துவம் கொடுத்தால் எப்படி? சந்தானத்துக்கு அதிக ஸ்கோப் கொடுக்க வேண்டும் என்பதற்காக எனக்கு ஸ்கோப் இல்லாமல் செய்வது சரியில்லை என்று கோபமுகம் காட்டுகிறார் விஷால்.

சந்தானம், பூபதிபாண்டியனால் அப்செட் ஆகி இருக்கிறார் விஷால்.
 

---Movie updates

No comments: