17 Jun 2013

விஜய்காக காத்திருக்கும் பிரபல இயக்குனர்.


ரஜினியையே வைத்து படம் இயக்கிவிட்டார் பி.வாசு. ஆனால் விஜய்யை வைத்து ஒரு படத்தை இயக்கிவிடலாம் என்றால் நோ சான்ஸ் ஆகவே இருக்கிறது. ஆனால் இந்த முறை வெயிட்டான ஒரு பேக்ரவுண்டோடு போய் அவரை அமுக்கிவிடலாம் என்று கணக்கு போட்டிருக்கிறார்.
ஆனால் கணக்கு இன்னும் விடை தெரியாமல் இழுத்தபடியே இருக்கிறது.

பி.வாசு காட்டிய பேக்ரவுண்ட் என்ன? ஹாலிவுட்!

 சந்திரமுகி படத்தை பார்த்த அமெரிக்க வாழ் தமிழர் ஒருவர் நேரடியாக பி.வாசுவை பார்த்து ஹாலிவுட்ல வந்து இதே மாதிரி ஒரு படத்தை எடுத்துக் கொடுங்க என்றாராம். அதுக்கென்ன செஞ்சுட்டா போச்சு என்று முடிவெடுத்த பி.வாசு, இங்கிருந்து அனில்கபூர், சோனம் கபூர் ஆகியோரையெல்லாம் படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்துவிட்டார். ஹீரோவாக நடிக்க விஜய்யிடம் பேசிக் கொண்டிருக்கிறாராம். கோடிக்கணக்கில் சம்பளம், ஹாலிவுட் பட வாய்ப்பு என்றெல்லாம் விஜய்க்கு து£ண்டில் போட்டாலும், அப்பா மீன் என்ன சொல்லப் போகிறதோ? அதுதானே ரிசல்ட்!

காத்திருக்கிறார்கள் பி.வாசுவும் இவரை நம்பி தமிழ்நாட்டுக்கு வந்த அமெரிக்க தமிழரும்.

 ---Movie updates   

No comments: