ஒருவழியா அஜித் படத்துக்கு தலைப்பு வைச்சாச்சு.
சிறுத்தை படத்தின் இயக்குனர் சிவாவின் இயக்கத்தில் அஜித் தனது 54வது படத்தில் நடித்து வருகிறார்.
முதலில் இப்படத்தின் தலைப்பை சுராங்கனி என்று வைத்திருந்த சிவா, தற்போது விநாயகம் பிரதர்ஸ் என்று பெயர் வைத்து விட்டாராம்.
இப்படத்தில் அஜித் மற்றும் அவரது தம்பியாக விதார்த் உள்பட சில நடிர்களும் நடிக்கிறார்கள்.
படத்தில் அஜித்தின் கதாபாத்திரத்தின் பெயர் விநாயகம் என்பதால், விநாயகம் பிரதர்ஸ் என்ற பெயர் வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
இருப்பினும் இந்த தகவலை அஜித் ரசிகர்கள் நம்பத்தயாராக இல்லை.
இப்படித்தான், முதலில் 53வது படத்துக்கு வலை என்று நினைத்தோம், அது பொய்யாகி விட்டது.
சம்பந்தப்பட்டவர்களாக ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பு விடாதபட்சத்தில் எதையும் நாங்க நம்பத்தயாராக இல்லை என்று சொல்லி கொண்டிருக்கிறார்களாம்.
No comments:
Post a Comment