16 Jun 2013

உலகின் சிறந்த விமான நிலையம்:டெல்லி 2வது இடம்!

டெல்லியில் உள்ள இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையம் உலகின் 2வது சிறந்த விமான நிலையமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. தென் கொரியாவின் சியோல் விமான நிலையத்துக்கு முதல் இடம் கிடைத்துள்ளது.

உலகளவில் பயணிகள் வந்து செல்லும் எண்ணிக்கையை பொறுத்து, பல்வேறு பிரிவுகளாக விமான நிலையங்கள் பிரிக்கப்பட்டு, அவற்றின் தரத்தைப் பொறுத்து விருதுகள வழக்கப்ப்டுகின்றன. சர்வதேச விமான நிலைய கவுன்சில் இந்த விருதை வழங்குகிறது. அந்த வகையில் 2.5 கோடி முதல் 4 கோடி பயணிகள் பயன்படுத்தும் விமான நிலையங்கள் பிரிவில் டெல்லி விமான நிலையம் 2வது இடத்தை பிடித்துள்ளது.

 அனைத்து பிரிவுகளிலும் மொத்தம் உள்ள 199 விமான நிலையங்களில் டெல்லி விமான நிலையத்துக்கு 4 வது இடம் கிடைத்துள்ளது. துருக்கி நகர் இஸ்தான்புலில் நேற்று முன்தினம் நடைபெற்ற விழாவில், 9 பேர் கொண்ட குழு இந்த விருதினைப் பெற்று கொண்டது. விமான நிலைய சேவை தரத்தில் இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்துக்கு 5க்கு 4.83 மதிப்பெண்கள் கிடைத்துள்ளது. கடந்த ஆண்டிலும் இந்த விமான நிலையம் 2வது இடத்தை பிடித்தது என்பது குறிப்பிடத் தக்கது. இந்திராகாந்தி விமான நிலையத்துக்கு ஆண்டுக்கு 6 கோடி பயணிகள் வந்து செல்ல முடியும்.

இருந்தாலும் 2012ல் 3.4கோடி பயணிகளே இந்த விமான நிலையத்தை பயன்படுத்திக் கொண்டனர். இதே கால கட்டத்தில் இந்த விமான நிலையத்துக்கு 3 லட்சம் விமானங்கள் வந்து சென்றுள்ளன. டெல்லி சர்வதேச விமான நிலைய தலைமை அதிகாரி பிரபாகர் ராவ் கூறுகையில், "பயணிகளின் எதிர்பார்ப்புக்களுக்கு ஏற்ப எமது ஊழியர்களும், பங்குதாரர்களும் தொடர்ந்து செயல்பட்டதால் இந்த பெருமை கிடைத்துள்ளது." என்று கூறியுள்ளார்.

 
---Movie updates  


No comments: