1 Jun 2013

தொழிலதிபரை காதலிக்கும் லட்சுமி ராய்!
நடிகைகளுக்கே உண்டான வாழ்வியல் இலக்கணம் மாறாமல், தொழிலபதிர் ஒருவரை காதலிப்பதாக பேட்டியளித்து, அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி இருக்கிறார் லட்சுமிராய்.

தமிழ், தெலுங்கு என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருபவர் லட்சுமிராய். சமீபத்தில் IPL SPOTFIXINGலும் இவரது பெயர் அடிபட்டது.

இது குறித்து லட்சுமிராய் "எனக்கேற்ற காதலனை நான் தேர்வு செய்துவிட்டேன். கடந்த ஓராண்டுக்கும் மேலாக நாங்கள் பழகி வருகிறோம். அவர் ஒரு தொழில் அதிபர். ஜோவியலாக, நட்பு முறையில் பழகுபவர், நல்ல மனம் படைத்தவர். அவர் யார்? என்று கேட்கிறார்கள்.

தென்னிந்தியாவை சேர்ந்தவர். யார் என்பதை விரைவில் தெரிவிப்பேன். இவரை போன்ற ஒருவரைதான் வாழ்க்கை துணையாக அடைய வேண்டும் என்று எண்ணி இருந்தேன். நான் நடித்த சில படங்களை அவர் பார்த்திருக்கிறார். அவருக்கு பிடித்திருந்தது. ஆனால் சினிமா மோகம் பிடித்தவர் அல்ல.

தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என 4 மொழிகளில் நடித்து வருகிறேன். இந்தியில் நடிக்கும் படம் பற்றி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. எனவே, எனது திருமணம் 2 ஆண்டு கழித்து நடக்கும். திருமணத்துக்கு பிறகு கணவருடன் தொழில் பார்ட்னர் ஆவேனா, தொடர்ந்து நடிப்பேனா என்பது பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை.

சமீபகாலமாக கிரிக்கெட் வீரர்களுடன் என்னை தொடர்புபடுத்தி கேள்வி கேட்கிறார்கள். யாருடனும் எனக்கு இப்போது தொடர்பு இல்லை. சொல்லப் போனால் இந்தியாவில் கிரிக்கெட் போட்டிக்கு தரும் முக்கியத்துவத்தை நமது தேசிய விளையாட்டான ஹாக்கிக்கு தருவதில்லை என்பது வருத்தம் அளிக்கிறது " என்று தெரிவித்துள்ளார்.
 

No comments: