அஜித்தின் காமெடி கதகளி!
அஜித் நடிப்பில் உருவாகி கொண்டு இருக்கும் படங்கள் எப்போது வெளியாகும் என்று விசாரித்ததில் சில ஆச்சர்ய தகவல்கள் கிடைத்தன.
அஜித் தற்போது விஷ்ணுவர்தன் இயக்கத்தில் பெயரிடப்படாத படத்திலும், 'சிறுத்தை' சிவா இயக்கத்திலும் நடித்து வருகிறார். விஷ்ணுவர்தன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருந்து வருகிறது.
குலுமணாலியில் இறுதிக்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு திரும்பி இருக்கும் விஷ்ணுவர்தன் படக்குழு இம்மாதம் இறுதியில், அல்லது ஜுன் முதல் வாரத்தில் படத்தின் தலைப்பு, FIRST LOOK போஸ்டர்கள் ஆகியவற்றை வெளியிட இருக்கிறார்கள்.
அதனைத் தொடர்ந்து இசை வெளியீட்டு விழா முடிந்தவுடன், படத்தினை ஆகஸ்ட் 15ம் தேதி பிரம்மாண்டமாக வெளியிட இருக்கிறார்கள். அதுமட்டுமன்றி 'சிறுத்தை' சிவா இயக்கத்தில் உருவாக இருக்கும் படமும் இந்தாண்டே வெளிவர இருக்கிறதாம்.
தேவிஸ்ரீபிரசாத் இசையமைக்க இருக்கும் இப்படத்தில், முதன் முறையாக காமெடி கதகளி ஆட இருக்கிறாராம் அஜித். தனது ரசிகர்கள் இதுவரை பாத்திராத பாத்திரத்தில் நடித்து இன்ப அதிர்ச்சி அளிக்க இருக்கிறார் என்கிறார்கள்.
முதற்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று முடிவடைந்து விட்டது. விஷ்ணுவர்தன் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதால், தொடர்ச்சியாக 'சிறுத்தை' சிவா படத்தினையும் முடித்து கொடுக்க திட்டமிட்டு இருக்கிறாராம் அஜித்.
இந்தாண்டு இறுதியிலேயே 'சிறுத்தை' சிவா படத்தினையும் வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள்.

No comments:
Post a Comment