7 Jun 2013

வழக்கமான பாணியில் சசியின் ஆட்டம்! 

பிரிக்கவே முடியாதது எது என்று கேட்டால் சசிகுமாரும், அவரது வழக்காமான ஸ்டைலும் என்று கண்ணை மூடிக்கொண்டு சொல்லிவிடலாம்.

நட்பு, காதல், துரோகம் என்பதையே கதைக்களனாகக் கொண்டு 'சுப்பிரமணியபுரம்' படத்தின் மூலம் அழுத்தமான முத்திரையைப் பதித்த சசிகுமாரை சினிமா உலகம் ரொமபவே விரும்பிப் பார்த்தது. அதுவே 'நாடோடிகள்', 'போராளி' , 'சுந்தரபாண்டியன்' என்று தொடர்ந்தது.

'குட்டிப்புலி' பார்த்தபிறகு ஏன் தான் இந்தப் படத்தைப் பார்த்தோமோ என்று கதி கலங்க வைத்தார் சசி. விரும்பிப் பார்த்த அவரை இப்போது திரும்பிப் பார்க்கவே பலத்த யோசனை செய்ய வேண்டி இருக்கிறது.

இந்நிலையில் குட்டிப்புலியைக் கிராமத்து மக்கள் ஏற்றுக்கொண்டதால் இதான் நம்ம ரூட்டு. போலாம் ரைட் என்று சொல்லிவிட்டார் சசி.

சாக்ரடீஸ் இயக்கும் 'பிரம்மன்' படத்தில் நடிக்கும் சசிகுமார் தன் வழக்கமான பாணியிலேயே கதை நாயகனாக வருகிறாராம். இப்படமும் நண்பர்கள், துரோகிகள் பற்றிய படம் தானாம். இன்னொரு கழுத்தறுப்புக் காட்சியைப் பார்க்க வேண்டிய பாக்யம் தமிழ் சினிமா ரசிகனுக்கு வாய்த்திருக்கிறது.

No comments: