மீண்டும் இணையும் 'RAANJHANAA' கூட்டணி!
இந்தியில் தனுஷ் அறிமுகமாகும் 'RAANJHANAA' படம் ஜுன் 21ம் தேதி வெளியிட
திட்டமிட்டு இருக்கிறார்கள். அன்றைய தினமே தமிழிலும் அப்படத்தினை
'அம்பிகாபதி' என்ற பெயரில் டப்பிங் செய்து வெளியிட இருக்கிறார்கள்.
'RAANJHANAA' படத்தில் தனுஷ் ஜோடியாக சோனம் கபூர் நடித்து இருக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, ஆனந்த் எல்.ராய் இயக்கி இருக்கிறார்.
இந்தியில் ஆனந்த் எல்.ராய் மிக முக்கிய இயக்குனராவார். ஏற்கனவே 'TANU WEDS MANU' என்ற படத்தினை இயக்கி இருக்கிறார். தற்போது மீண்டும் தனுஷ் - ஆனந்த் எல்.ராய் இருவரும் இணைந்து படம் பண்ண திட்டமிட்டு இருக்கிறார்கள்.
இது குறித்து தனுஷ் தனது டிவிட்டர் இணையத்தில் " 2014ல் மீண்டும் நான் ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் நடிக்க இருக்கிறேன். இந்தி மற்றும் தமிழ் என இருமொழிகளிலும் அப்படம் தயாராக இருக்கிறது. அப்படத்தினை எனது WUNDERBAR நிறுவனம் மற்றும் ஆனந்த் இருவருமே இணைந்து தயாரிக்க இருக்கிறோம் " என்று அறிவித்து இருக்கிறார்.
தற்போது தனுஷ் சற்குணம் இயக்கத்தில் 'நையாண்டி'யைத் தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கும் படம், கே.வி.ஆனந்த் இயக்கும் படம், ஆகியவற்றில் நடிக்க ஒப்புக் கொண்டு இருக்கிறார்.

No comments:
Post a Comment