சீமான் இயக்கத்தில் ஜெயம் ரவி!
தொடர்ச்சியாக அரசியல் கூட்டங்கள், நாம் தமிழர் கட்சி பணிகள் என மும்முரமாக
இருக்கும் சீமான், இனிமேல் படம் இயக்கப்போவது இல்லையா? என்று விசாரித்தால்
பல ஆச்சர்யமான தகவல்கள் கிடைத்தன.
கலைப்புலி தாணு தயாரிப்பில் விஜய் நடிப்பில் சீமான் இயக்க இருந்த படம்தான் 'பகலவன்'. இப்படத்திற்காக தனி அலுவலகம் எல்லாம் அமைத்து, அனைத்து பணிகளும் முடிவுற்று படப்பிடிப்பு தொடங்க இருந்த நிலையில், அப்படத்தில் இருந்து விலகிவிட்டார் விஜய்.
அவரைத் தொடர்ந்து சீமானும் தனது கட்சிப் பணிகள் என மும்முரமாக ஈடுபட்டு வந்தார். இடையே 'பகலவன்' படத்தில் விக்ரம் அல்லது ஜீவா நடித்தால் நன்றாக இருக்கும் என்று பேட்டியளித்தார்.
ஆனால் விக்ரம் படக்கதையை கேட்கவில்லை. ஜீவாவோ கதையை கேட்டுவிட்டு இப்போதைக்கு வேண்டாம் என்று விலகிவிட்டார். தற்போது 'பகலவன்' கதையினை கேட்டுவிட்டு அருமையான கதை 'நான் நடிக்கிறேன்' என்று என்ட்ரி கொடுத்து இருப்பவர் ஜெயம் ரவி,
ஜெயம் ரவிக்கு கோயம்புத்தூரில் வைத்து சுமார் 3 மணி நேரம் கதையை கூறி இருக்கிறார் சீமான். கதையை கூறும் போதே படத்தில் நடித்து கொண்டிருப்பது போலவே தோன்றும். அவ்வாறு கதை கூறும் திறமையுள்ளவர் சீமான். அவ்வாறு அவர் கூறவே, 'உடனே நடிக்கிறேன் அண்ணே' என்று கூறிவிட்டார் ஜெயம் ரவி.
சீமான் - ஜெயம் ரவி இணையும் 'பகலவன்' படத்தினைத் தயாரிக்கப் போவது கலைப்புலி தாணு தான். விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க இருக்கிறார்கள்.
'பூலோகம்', 'நிமிர்ந்து நில்' ஆகிய படங்களைத் தொடர்ந்து சீமான் இயக்கத்தில் நடித்துவிட்டுத்தான் அண்ணன் ராஜா இயக்கத்தில் நடிக்க திட்டம் வைத்து இருக்கிறாராம் ரவி.

No comments:
Post a Comment