சூதாட்ட விவகாரத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களுக்கு எந்த தொடர்பும் இல்லை : ஸ்டீபன் ஃபிளெமிங்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்பில் எழுந்துள்ள சூதாட்ட
குற்றச்சாட்டுக்களுடன் அணி வீரர்களுக்கோ அல்லது உதவி அதிகாரிகளுக்கோ எந்த
தொடர்பும் இல்லை என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்றுனர் ஸ்டீபன்
ஃபிளெமிங் தெரிவித்துள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் குருநாத் மெய்யப்பன் சூதாட்ட
குற்றச்சாட்டு தொடர்பில் மும்பை குற்றப்புலனாய்வு துறையினரால் கைது
செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வரும் நிலையில், இன்று சென்னை சூப்பர்
கிங்ஸ் அணியின் நிருபர்கள் கூட்டம் நடைபெற்றது.
அதில் கேப்டன் தோனி கலந்து கொள்ளவில்லை. மழை காரணமாக அணியினர் ஹோட்டலுக்கு திரும்பிவிட்டதாகவும் நாளை போட்டிக்காக தயாராக வேண்டியிருப்பதாகவும் கூறிய ஸ்டீபன் பிளெமிங், சென்னை சூப்பர் கிங்ஸ் சார்பில் அறிக்கை ஒன்றை வாசித்தார். அதில் சென்னை அணி தொடர்பில் எழுந்துள்ள புதிய குற்றச்சாட்டுக்கள் வீரர்களுக்கும், ஏனைய துணை அதிகாரிகளுக்கும் மன உளைச்சலை ஏற்படுத்தியிருப்பதாக கூறினார்.
'நாங்கள் ஒவ்வொரு போட்டியும் எங்களது முழுத்திறமையை காண்பித்தே விளையாடியுள்ளோம். இதுவரை நடந்த ஆறு ஐபிஎல் தொடர்களிலும் பிளே ஆஃப் சுற்றில் விளையாடிய சாதனை எமக்கு பெருமை அளிக்கிறது.
ஸ்பாட் பிக்ஸிங் அல்லது பெட்டிங் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களுக்கோ எமது துணை அதிகாரிகளுக்கு எந்தவித தொடர்பும் இல்லை. இன்று எழுந்துள்ள கடினமான தருணத்தில் நாளை ஐபிஎல் இறுதி போட்டிக்காக மும்பையுடன் மோதவிருக்கிறோம்' என அவர் தெரிவித்தார்.
சென்னை அணியின் உரிமையாளர் மீது எழுந்த குற்றச்சாட்டை அடுத்து, சூப்பர் கிங்ஸ் அணியை ஐபிஎல் இலிருந்து வெளியேற்ற வேண்டும் என ஒரு முனையில் பேச்சு அடிபட்டுவந்ததாலும், அதை மறுத்துள்ள ஐபிஎல் நிர்வாகம் சென்னை தொடர்ந்து ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்கும். நாளை இறுதி போட்டி திட்டமிட்டபடி நடைபெறும் என அறிவித்துள்ளது.
சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் இலிருந்து விலக்கப்பட்டால் தான் இனி ஐபிஎல் போட்டிகளிலேயே விளையாட மாட்டேன் என கேப்டன் மகேந்திர சிங் தோனி தெரிவித்திருந்தார்.

இதேவேளை சென்னை அணியின் மூன்று வீரர்கள் மீதும், பஞ்சாப் அணியின்
ஐந்துக்கு மேற்பட்ட வீரர்கள் மீதும் ஸ்பாட் பிக்ஸிங் குற்றச்சாட்டு
முன்வைக்கப்படும் அபாயம் நிலவுவதாகவும், குறிப்பாக பஞ்சாப் அணி - ராஜஸ்தான்
ரோயல்ஸ் அணியுடனான ஒரு போட்டியில் தோல்வி அடைந்ததற்கு அதற்கு முதல்
நாளிரவு ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற பேரமே காரணமாக இருக்கலாம் எனவும் புதிய
விசாரணை தகவல்கள் வெளிவந்துள்ளன.
இதேவேளை மும்பையில் விசாரணையில் உள்ள குருநாத் மெய்யப்பன் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்து வருவதாகவும், அவரது குரல் மாதிரியை காவல்துறையினர் பதிவு செய்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும் நடிகர் விண்டூ தாரா சிங் மற்றும் மெய்யப்பனை ஒரே இடத்தில் வைத்து விசாரணை செய்யவும் உத்தேசித்துள்ளனர். மெய்யப்பன் எதிரவரும் 29ம் திகதி வரை தடுப்புக்காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

No comments:
Post a Comment