இரு மார்பகங்களை அகற்றிக்கொண்ட ஏஞ்சலினா ஜோலியும், பிராட் பிட்டின் உறுதுணையும்!
பிரபல ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி தனது இரண்டு மார்பகங்களையும் அறுவை சிகிச்சை மூலம் அகற்றியுள்ளார்.
மார்பகப் புற்றுநோய் ஏற்படக்கூடிய அபாயத்தை தவிர்ப்பதற்காகவே மாஸ்டெக்டோமி அறுவை சிகிச்சை மூலம் மார்பகங்களை அகற்றிகொண்டதாக ஏஞ்சலினா ஜுலி தெரிவித்துள்ளார்.

ஆறு குழந்தைகளுக்கு தாயான ஏஞ்சலினா ஜோலிக்கு 37 வயதாகிறது. அவருக்கு மார்பகப் புற்றுநோய் பாதிப்பு ஏற்படுவதற்கு 87 சதவீத வாய்ப்பும், கருப்பைப் புற்றுநோய் ஏற்படுவதற்கு 50 சதவீத வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் கூறி இருக்கிறார்கள். புற்றுநோய் அபாயத்தை குறைத்துக் கொள்வதற்காகவே அவர் மார்பகங்களை அகற்றி இருக்கிறார்.
தனக்கு புற்றுநோய் ஏற்படுத்தக்கூடிய மரபணுக்கள் இருப்பது
தெரியவந்த பின்னர், 9 வார சிகிச்சைக்கு சம்மதம் தெரிவித்ததாகவும், தற்போது
புற்றுநோய் அபாயம் 87 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைந்து
விட்டதாகவும் அறிவித்து இருக்கிறார் ஏஞ்சலினா ஜோலி.
பிப்ரவரியில் தொடங்கிய சிகிச்சை, ஏப்ரல் மாதக் கடையில் முடிந்ததாக தனது பேட்டியில் குறிப்பிட்டு இருக்கிறார் ஏஞ்சலினா ஜோலி. அவரது தாயாரும் 10 ஆண்டுகளுக்கு மேலாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு 56 வயதில் உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏஞ்சலினா ஜோலியின் அறுவை சிகிச்சை முடிவை வரவேற்றதுடன், சிகிச்சை பெற்று
வந்த அவருக்கு உறுதுணையாக இருந்துவருகிறார், அவரது வாழ்க்கைத் துணையான
நடிகர் பிராட் பிட்.
ஏஞ்சலினா ஜோலியின் மன உறுதியை பிராட் பிட் வெகுவாகப் பாராட்டி வருகிறார். அதேவேளையில், தன்னை முழுமையாகப் புரிந்துகொண்டு தனக்கு உற்ற துணையாக இருக்கும் பிராட் பிட் பற்றி நெகிழ்கிறார் ஏஞ்சலினா ஜோலி.
ஐ.நா.வின் நல்லெண்ணத் தூதராக இருந்துகொண்டு, உலக அளவில் மகத்தான சேவைகளைப் புரிந்துவரும் ஏஞ்சலினா ஜோலியின் மன உறுதிக்கு ஒரு சல்யூட்!

No comments:
Post a Comment