26 May 2013

சென்னையில் குட்டிபுலியை 90 தியேட்டர்களில் வெளியிட திட்டமிடும் உதயநிதி!
அவரு தயாரிச்சு வேறொருத்தருக்கு விற்று, அதை வேறொருவர் வாங்கி, அதை இன்னொருத்தருக்கு கைமாற்றி, ரிலீஸ் நேரத்துல பொட்டி யாரு கையில இருக்கும்னு தெரியாமலே சுற்றி சுற்றி வருவது அண்மைகால ட்ரென்ட். கூட்டி கழித்து பார்த்தால் கூட்டலும் கழித்தலும்தான் மிச்சம்னு சொல்ற அளவுக்கு இருக்கிறது இப்படி வரும் சில படங்களின் ரிசல்ட்!

இன்னும் சில தினங்களில் வெளிவரப்போகும் குட்டிப்புலி படத்தை வாகை சூடவா என்ற படத்தை தயாரித்த முருகானந்தம்தான் தயாரித்தார். அதை அப்படியே சன் பிக்சர்சுக்கு விற்றார்கள். இப்போது அந்த படத்தின் தியேட்டர் ரிலீஸ் வேலைகளை உதயநிதியின் ரெட் ஜயன்ட் நிறுவனம்தான் கவனிக்கப் போகிறதாம்.

அகல கரண்டியால சாம்பாரை அள்ளினால் கொஞ்சமாகவா வரும்? அப்படிதான் அணுகுகிறார்களாம் குட்டிப்புலியையும். சென்னையிலும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் இப்படத்தை சுமார் 90 தியேட்டர்களில் வெளியிட திட்டமிட்டிருக்கிறாராம் உதயநிதி. அப்படியென்றால் மற்ற நகரங்களில் எப்படியிருக்கும் பார்த்துக் கொள்ளுங்கள்.

முன்பெல்லாம் ரஜினி விஜய் படங்களுக்குதான் இப்படி மாஸ் காண்பிப்பார்கள். இப்போது சசிகுமார் படத்திற்கும்! ஹ்ம்ம்ம்… கோடம்பாக்கத்தின் அட்டாக் கோக்குமாக்காகவே இருக்கிறது கொஞ்ச நாட்களாக! 

No comments: