26 May 2013

ரஜினியின் அட்வைஸால் ஹீரோவாகும் கனவை கைவிட்ட அனிருத்!
விஜய், முருகதாஸ் இணையப்போகும் படத்திற்கு அனிருத் இசைமைப்பாளராகிவிட்டார் என்ற செய்தி கோடம்பாக்கத்தில் சில பேருக்கு பெருங்காயத்தையும், சில பேருக்கு வெல்லத்தையும் கரைத்துக் கொடுத்திருக்கிறது. பெருங்காய பார்ட்டிகளை விடுங்கள்… வெல்லக்கட்டி மனசுக்காரர்களை பார்ப்போம்.
முதலில் அனிருத்தை அழைத்து பாராட்டியவர் ரஜினிதானாம். ‘உன் வளர்ச்சிக்கு என்னோட ஆசிர்வாதங்கள்’ என்றவர், அதற்கப்புறம் சொன்னதுதான் அனிருத் கைகட்டி வாய்பொத்தி கேட்க வேண்டிய விஷயம். ‘இப்படியே இசையிலே கவனம் செலுத்தி இன்னும் இன்னும்னு பெரிய படங்கள் செய்யணும். அவ்வளவு ஏன்? நீ என் படத்திற்கு இசையமைக்கிற நேரமும் வந்து கொண்டேயிருக்கு. (பிளான் பண்ணிட்டாரோ) இந்த நேரத்தில் நானே ஹீரோவா நடிக்கிறேன்னு இறங்கி வாழ்க்கைய ஸ்பாயில் பண்ணிக்காதே. இறைவன் காட்ற ரூட்டுல சந்தோஷமா போகணும். நீயே இன்னொரு பாதையை டிசைட் பண்ணி, கிடைச்சிருக்கிறதையும் விட்ற கூடாது. யோசி’ என்றாராம்.
அவரே சொல்லிட்ட பிறகு அப்புறம் என்ன? தனது ஹீரோ ஆசையை டிஷ்யூ பேப்பர் வைத்து அனிருத் துடைத்தெறிந்தால் அதில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை.
அனிருத்தை மடக்க ஏகப்பட்ட வியூகத்துடன் அவர் வீட்டு தெருவை நோட்டம் விட்டு வரும் உதவி இயக்குனர்கள் அப்படியே தெருமுனை டீக்கடையில் ஒரு கப் டீ சாப்பிட்டு விட்டு யுவன் ஷங்கர் வீட்டுப்பக்கம் போனால் எண்ணத்தை நிறைவேற்றிக் கொள்ளலாம். ஏனென்றால் அனிருத் மனசில் பூத்த மொட்டு இப்போது யுவன் மனசில்தான் ஜில்லென்று பூத்திருக்கிறதாம்.

No comments: