17 Jun 2013

அமெரிக்க அரசு தம்மிடம் கேட்டது என்ன? : வெளியிட்டது பேஸ்புக்.


அமெரிக்க அரசிடமிருந்து தமது யூசர்களின் அக்கவுண்டுக்களை பாதுகாக்க கடுமையாக போராடி வருவதாக பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது. 

அமெரிக்க பாதுகாப்புத்துறை பேஸ்புக், விண்டோஸ், டுவிட்டர், ஆப்பிள் என பிரபல இணைய நிறுவனங்களிடமிருந்து அவற்றின் பாவணையாளர்களின் சில தகவல்களை இரகசியமாக கேட்டு மிரட்டுவதாக அமெரிக்கப் பாதுகாப்பு துறையில் பணிபுரிந்த முன்னாள் தொழில்நுட்பவியாலாளர் ஸ்னோவ்டென் அண்மையில் ஓர் இரகசியத்தை போட்டுடைத்திருந்தார்.


இதையடுத்து சமூக வலைத்தளங்களிடம் அதன் பாவணையாளர்கள் கேள்வி மேல் கேள்வி போட்டுத் தாக்குகிறார்கள். இந்நிலையில் பேஸ்புக் நிறுவனம், தனக்கு அமெரிக்க அரசிடமிருந்து 9,000 - 10,000 ற்கு மேற்பட்ட விண்ணப்பங்களை அனுப்பப்பட்டிருந்ததாகவும் அவை அனைத்தும், தமது பயனாளர்களின் இரகசியத் தகவல்களைக் கேட்டு அனுப்பட்ட கோரிக்கைகள் எனவும் தெரிவித்துள்ளது.


தமக்கு இதே போன்று அமெரிக்காவிடமிருந்து 6,000 - 7,000 கோரிக்கைகளை அமெரிக்க அரசு அனுப்பியிருப்பதாக மைக்சோராப்ட் தெரிவித்துள்ளது. உள்ளூர் குற்றவாளிகள் மற்றும் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக விளங்குபவர்கள் என அமெரிக்க அரசு சந்தேகிக்கும் நபர்களின் இணையத்தகவல்களை தருமாறே அமெரிக்க அரசு கோரியுள்ளதாம்.


பேஸ்புக், கூகுள், யாகூ, அப்பிள் மற்றும் மைக்ரோசாப்ட் என முக்கிய இணைய நிறுவனங்களிடமிருந்து அவற்றின் பாவணையாளர்களின் சில தகவல்களை அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஏஜென்ஸி (NSA) பெற முனைந்ததாகவும் இந்த திட்டத்திற்கு Prism என பெயரிடப்பட்டு செயற்படத் தொடங்கியிருந்ததாகவும் முன்னர் குற்றச்சாட்டு எழுந்திருந்தது. எனினும் இதை மறுத்திருந்த அமெரிக்க அரசு சட்டரீதியான கோரிக்கைகளை மாத்திரமே தாம் விடுத்திருந்ததாகவும், எவரது தனிப்பட்ட விபரங்களிலும் தலையிடும் உரிமை எமக்கு வழங்கப்படவில்லை எனவும் கூறியிருந்தது.


---Movie updates    

No comments: